ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று அடிலெய்டில் தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் கரோனா விதிமுறைகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்டு வருகிறாது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். ஏற்கெனவே முதல் போட்டியை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டாவது போட்டியையும் வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி: மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கே), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி , மைக்கேல் நேசர், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜெய் ரிச்சர்ட்சன்.
இங்கிலாந்து அணி: ரூட் (கேப்டன்), பர்ன்ஸ், ஹமீது, மலான், ஸ்டோக்ஸ், போப், பட்லர் (விக்கெட் கீப்பர்), வோக்ஸ், ராபின்சன்,பிராட், ஆண்டர்சன்.