பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் அந்த அணி மைதானத்தில் நடந்த 2ஆவது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்டீவ் ஸ்மித் விளையாடும் 100ஆவது டெஸ்ட் போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இங்கிலாந்து: ஜேக் கிரௌலி, பென் டக்கட், ஹாரி புரூக், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்(கே), மிட்செல் ஸ்டார்க், டோட் மர்பி, ஸ்காட் போலண்ட்.