ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2ஆவது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணி மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா: கேஎல் ராகுல், ரோகித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்
பாகிஸ்தான் : முகமது ரிஸ்வான், பாபர் அசாம்(கே), ஃபகார் ஜமான், குஷ்தில் ஷா, இப்திகார் அகமது, ஷதாப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.