
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி இன்று நடைபெறும், தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸை வென்ற வங்கதேச அணி கேப்டன் லிட்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஹாங்காங் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
வங்கதேசம் பிளேயிங் லெவன்: பர்வேஸ் ஹொசைன் எமோன், டான்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ்(கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி, மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்
ஹாங்காங் பிளேயிங் லெவன்: ஜீஷன் அலி, அன்ஷுமன் ராத், பாபர் ஹயாத், நிஜாகத் கான், கல்ஹான் சல்லு, கிஞ்சித் ஷா, யாசிம் முர்தாசா(கேப்டன்), அய்சாஸ் கான், எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, அதீக் இக்பால்