பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று (நவம்பர் 10) பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் டெஸ்ட் தொடர் காரணமாக அணியின் முன்னணி வீரர்கள் பலரும் இப்போட்டியில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ஐந்து மாற்றங்களுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: மேத்யூ ஷார்ட், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஜோஷ் இங்கிலிஸ்(கே), கூப்பர் கோனாலி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆரோன் ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன், லான்ஸ் மோரிஸ்
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், அப்துல்லா ஷஃபீக், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் (கே), கம்ரான் குலாம், ஆகா சல்மான், இர்ஃபான் கான், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன்.