AUS vs WI, 1st ODI: டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு!
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு…
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸேவியர் பார்ட்லெட், லான்ஸ் மோர்ஸ் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ்: ஜஸ்டின் க்ரீவ்ஸ், அலிக் அதானாஸ், கேசி கார்டி, ஷாய் ஹோப்(கே), கவேம் ஹாட்ஜ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், மேத்யூ ஃபோர்ட், ஹைடன் வால்ஷ், குடகேஷ் மோட்டி, ஓஷேன் தாமஸ்
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ்(டபிள்யூ), ஸ்டீவ் ஸ்மித்(கே), கேமரூன் கிரீன், மார்னஸ் லாபுஷாக்னே, மேத்யூ ஷார்ட், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், ஸேவியர் பார்ட்லெட், லான்ஸ் மோரிஸ், ஆடம் ஸாம்பா.