IND vs ENG, 2nd Test: டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங் தேர்வு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸை வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸை வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர ராஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, முகமது சிராஜிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் அதற்கு பதிலடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியும் தங்களது வெற்றி கணக்கை தொடரும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கே), ஷுப்மன் கில், ரஜத் பட்டிதார், ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார், குல்தீப் யாதவ்.
இங்கிலாந்து : ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ்(கே), பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹ்மத், டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.