இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய் அழைத்துள்ளது.
இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியானது ஏற்கெனவே அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய மகளிர் பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, மின்னு மணி, சைமா தாகூர், ரேணுகா தாக்கூர் சிங், அருந்ததி ரெட்டி, டைடாஸ் சாது
ஆஸ்திரேலியா மகளிர் பிளேயிங் லெவன்: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஜார்ஜியா வோல், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, அனாபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெஹ்ராத்(கே), சோஃபி மோலினக்ஸ், அலனா கிங், கிம் கார்த், மேகன் ஷட்.