வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 115 ரன்களும் கேப்டன் பூரன் 74 ரன்களும் எடுத்தார்கள். ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து பரபரப்பான முறையில் வெற்றி பெற்றது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 5 விக்கெட்டுகளே மீதமிருந்தன.
ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். ஷுப்மன் கில் 43, ஷ்ரேயஸ் ஐயர் 63, சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்தார்கள்.
Axar Patel Played The Knock Of His Life #Cricket #WIvIND #IndianCricket #Westindies #teamindia #Axarpatel #AksharPatelpic.twitter.com/XPCAIEwGmd
— CRICKETNMORE (@cricketnmore) July 25, 2022