இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இத்தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இவ்விரு அணிகளும் பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து: ஃபின் ஆலன், வில் யங், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளூன்டெல், ரச்சின் ரவீந்திரன், கோல் மெக்கன்சி, இஷ் சோதி, ஆடம் மில்னே, லாக்கி ஃபெர்குசன் (கே), டிரென்ட் போல்ட்.
வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம், ஜாகிர் ஹசன், மஹேதி ஹசன், நாசும் அகமது, ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், கலீத் அகமது.