BAN vs PAK, 2nd T20I: டாஸ் வென்று வங்கதேச அணி பேட்டிங் தேர்வு!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தக்காவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான் : முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), ஃபகார் ஸமான், ஹைதர் அலி, சோயப் மாலிக், குஷ்தில் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்
வங்கதேசம் : முகமது நைம், சைஃப் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, அஃபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லா, நூருல் ஹசன், மஹேதி ஹசன், அமினுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசூர் ரஹ்மான்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News