BANW vs INDW, 1st T20I: டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங் தேர்வு!
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்துள்ளார்.
வங்கதேச மகளிர் அணி: திலாரா அக்தர், முர்ஷிதா காதுன், ஷோர்னா அக்தர், நிகர் சுல்தானா(கே), ஃபஹிமா காதுன், ரபேயா கான், சோபானா மோஸ்டரி, நஹிதா அக்தர், சுல்தானா காதுன், மருஃபா அக்தர், ஃபரிஹா த்ரிஸ்னா.
இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர் (கே), சாஜனா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா தாக்கூர் சிங், ராதா யாதவ்.
கிரிக்கெட்: Tamil Cricket News