ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று நடைபெறும் 45ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அஹ்மதாபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் லோக்கி ஃபெர்குசன் நீக்கப்பட்டு கிளென் மேக்ஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில்(கே), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், அஸ்மதுல்லா ஒமர்சாய், ராகுல் திவேத்தியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோஹித் சர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), வில் ஜாக்ஸ், ரஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங், கர்ண் சர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்.