பிபிஎல் 2024-25: ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட் அபாரம்; ஸ்கார்சர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
14ஆவது சீசன் பிக் பேஷ் தொடரில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜோஷ் பிலீப் 9 ரன்களுக்கும், கர்டிஸ் பேட்டர்சன் 12 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News