டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் (விளையாடும் லெவன்): ஹரி நிஷாந்த் (கே), விமல் குமார், மணி பாரதி, ஆர் விவேக், ராஜமணி சீனிவாசன், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், எஸ் சுவாமிநாதன், எம் சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், லட்சுமிநாராயணன் விக்னேஷ்.
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் (விளையாடும் லெவன்): கவுசிக் காந்தி (கே), ஜெகதீசன் , ராதாகிருஷ்ணன், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், ஹரிஷ் குமார், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், அருண், அலெக்சாண்டர்.