சிபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இடம்பிடித்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது.
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ்: கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், டுவைன் பிராவோ (கே), ஃபேபியன் ஆலன், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜோஷ்வா டா சில்வா, டொமினிக் டிரேக்ஸ், ஷெல்டன் காட்ரெல், நசீம் ஷா, ஜான்-ரஸ் ஜகேசர், ஃபவாத் அஹ்மத்.
செயிண்ட் லூசியா கிங்ஸ்: ஆண்ட்ரே பிளெட்சர் (கே), ரகீம் கார்ன்வால், மார்க் டீயல், ரோஸ்டன் சேஸ், டேவிட் வீஸ், டிம் டேவிட், கீமோ பால், ஜீவர் ராயல், அல்ஜாரி ஜோசப், வஹாப் ரியாஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.