கரோனா தொற்றால் பாதியில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது, மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது.
இதில் இன்று நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்திய அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, உடற்தகுதி காரணமாக இப்போட்டியில் இடம்பெறவில்லை. இதனால், மும்பை அணியின் கேப்டனாக கீரேன் போல்லார்ட் செயல்படுகிறார்.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளார்.
ஏற்கெனவே நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் சென்னை அணி களமிறங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹசில்வுட்.
மும்பை இந்தியன்ஸ் - குயின்டன் டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், அன்மொல்ப்ரீத் சிங், சவுரப் திவாரி, குர்னால் பாண்டியா, கீரேன் பொல்லார்ட், ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.