
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா, ஜேக்கப் டஃபி ஆகியோர் விளையாடாத நிலையில், வில் யங், மெட் ஹென்றி அகியோர் லெவனில் இடம்பிடித்துள்ளனர். மறுபக்கம் பாகிஸ்தான் அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹாரிஸ் ராவுஃப் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக இத்தொடருக்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியானது இரண்டிலுமே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டெவன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர்(கே), நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, வில்லியம் ஓரூர்க்
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஃபகார் ஜமான், பாபர் அசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கே), சல்மான் ஆகா, தையாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது.