
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் நேற்று தொடங்கியது.
இரண்டாம் நாளான இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியின் தொடங்குவதற்கு முன் மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
நெதர்லாந்து அணி: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பாரேசி, ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், ரோலோஃப் வான் டெர் மெர்வே, தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், லோகன் வான் பீக், ரியான் க்ளீன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், கொலின் அக்கர்மேன், சாகிப் சுல்பிகார், பாஸ் டி லீட்
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ்(கே), ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, டிராவிஸ் ஹெட் , சீன் அபோட்.