ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஓமன்: காஷ்யப் பிரஜாபதி, ஜதீந்தர் சிங், அகிப் இலியாஸ், ஷோயப் கான், ஜீஷன் மக்சூத்(கே), முகமது நதீம், அயான் கான், நசீம் குஷி, பிலால் கான், ஜே ஒடெத்ரா, ஃபயாஸ் பட்
இலங்கை: பாதும் நிஷங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தசுன் ஷனக(கே), தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, லஹிரு குமார.