ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 6 சுற்றின் 4ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வேவில் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புலவாயோவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இரு அணியும் சமபலத்துடன் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஜிம்பாப்வே: ஜாய்லார்ட் கும்பி, கிரெய்க் எர்வின்(கே), சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மாதேவெரே, சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் நகரவா, ப்ளெசிங் முசரபானி.
இலங்கை: பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா(கே), வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, டில்ஷான் மதுஷங்க, மதீஷா பதிரானா.