ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அதன்படி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் இன்று ஜிம்பாப்வேவில் தொடங்குகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஜிம்பாப்வே - நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்ததுள்ளது.
ஜிம்பாப்வே: ஜாய்லார்ட் கும்பி, கிரேக் எர்வின்(கே), வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், கிளைவ் மடண்டே, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்கரவா, டெண்டாய் சதாரா, பிளஸ்சிங் முசரபானி
நேபாளம்: குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், பீம் ஷர்கி, ரோஹித் பவுடல்(சி), குஷால் மல்லா, ஆரிப் ஷேக், திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லமிச்சனே.