ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 5ஆவது போட்டியில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே நேபாள் அணிக்கெதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நெதர்லாந்து: மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீடே, தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், கிளேட்டன் ஃபிலாய்ட்.
ஜிம்பாப்வே: ஜாய்லார்ட் கும்பி, கிரெய்க் எர்வின்(கே), வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஸா, ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்காரவா, டெண்டாய் சதாரா, பிளஸ்ஸிங் முசரபானி.