பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஹர்மன்ப்ரித் தலைமையிலான இந்திய மகளிர் அணி, மெக் லெனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தங்கப்பதக்கத்தை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர்(கே), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, தனியா பாட்டியா, ராதா யாதவ், மேக்னா சிங், ரேணுகா சிங்
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி, பெத் மூனி, மெக் லானிங்(கே), தஹ்லியா மெக்ராத், ரேச்சல் ஹெய்ன்ஸ், ஆஷ்லே கார்ட்னர், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்.