ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது இன்று கார்டிஃபில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் வழக்கமான கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதன் காரணமாக டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் கேப்டனாக செயல்படுகிறார். மேலும் அவருக்கு மாற்று வீரராக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதுதவிர்த்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், ஸேவியர் பார்ட்லெட் ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்ட் ஆரோன் ஹார்டி, கூப்பர் கனோலி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரைடன் கார்ஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி: வில் ஜாக்ஸ், பில் சால்ட் (கே), ஜோர்டான் காக்ஸ், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், சாம் கர்ரன், பிரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி.
ஆஸ்திரேலிய அணி: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட்(கே), ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், கூப்பர் கனொலி, ஆடம் ஸாம்பா.