ENG vs IND, 1st ODI: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக அனுபவ வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி விளையாடவில்லை.
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(கே), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News