ஐசிசி டி20 தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ்!

Career-Best Position For Surya Kumar Yadav In Latest Rankings
ஐசிசி டி20 போட்டிக்கான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்ய குமார் யாதவ் டாப் 10இல் இடம் பிடித்துள்ளார். அவர் 44 இடங்கள் முன்னேறி 5ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இதேபோல் பந்து வீச்சில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் டாப் 10ஆல் இடம் பிடித்தார். அவர் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் நோர்க்கியாவுடன் 7ஆவது இடத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News