
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சாம் குக் லெவனில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக இவர் எஸக்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேசமயம் அணியின் டாப் ஆர்டரில் ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட் ஆகியோர் தொடரும் நிலையில், ஜேமி ஸ்மித் விக்கெட் கீப்பராக செயல்படவுள்ளார். இதுதவிர்த்து சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷிர் இடம்பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சில் கஸ் அட்கின்சன் இருக்கும் நிலையில், ஜோஷ் டங் மற்றும் சாம் குக் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மேத்யூ பாட்ஸுக்கு லெவனில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், சாம் குக், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.
ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின், பிரையன் பென்னட், பென் கரண், டனகா சிவாங்கா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, வெலிங்டன் மசகட்சா, பிளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் ங்கராவா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நியுச்சி, சிக்கந்தர் ராசா, தஃபத்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.