ஐசிசியின் 14ஆவது அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இன்டீஸில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
மேலும் 24ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்திய அணி தனது 5ஆவது கோப்பையைக் கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று யார் மகுடம் சூடுவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா அண்டர் 19 அணி: ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ஷேக் ரஷீத், யாஷ் துல்(கே), நிஷாந்த் சிந்து, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தினேஷ் பனா, கௌஷல் தம்பே, ராஜ் பாவா, விக்கி ஓஸ்ட்வால், ரவிக்குமார்
இங்கிலாந்து அண்டர் 19 அணி : ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தேல், டாம் ப்ரெஸ்ட்(கே), ஜேம்ஸ் ரேவ், வில்லியம் லக்ஸ்டன், ஜார்ஜ் பெல், ரெஹான் அகமது, அலெக்ஸ் ஹார்டன், ஜேம்ஸ் சேல்ஸ், தாமஸ் ஆஸ்பின்வால், ஜோசுவா பாய்டன்.