வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் யாஷ் துல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா U19: கேம்ப்பெல் கெல்லவே, டீக் வில்லி, கோரி மில்லர், கூப்பர் கானொலி(கே), லாச்லன் ஷா, நிவேதன் ராதாகிருஷ்ணன், வில்லியம் சால்ஸ்மேன், டோபியாஸ் ஸ்னெல், ஜாக் சின்ஃபீல்ட், டாம் விட்னி, ஜாக் நிஸ்பெட்
இந்தியா U19 : ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ஷேக் ரஷீத், யாஷ் துல்(கே), நிஷாந்த் சிந்து, ராஜ் பாவா, கவுஷல் தம்பே, தினேஷ் பனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், விக்கி ஓஸ்ட்வால், ரவிக்குமார்.