கவாஸ்கரைப் பின்னுக்குத் தள்ளிய ஜோ ரூட்!

England’s Joe Root completes 10,191 runs in Test cricket, surpasses Sunil Gavaskar
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 10191 ரன்களை எடுத்ததன் மூலம் சுனில் கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாள் ஆட்டத்தில் 176 ரன்களை எடுத்து ஜோ ரூட் ஆட்டமிழந்தார். அதன்படி சுனில் கவாஸ்கரின் 10122ஐ தாண்டியுள்ளார். இதன் மூலம் தர வரிசையில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கவாஸ்கர் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 4 நாள் ஆட்ட முடிவில் 224 ரன்களுக்கு 7விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்று இந்திய நேரப்படி மாலை 3.30க்கு 5ஆம் நாள் ஆட்டம் தொடங்கவிருக்கிறது.
டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்
- சச்சின் டெண்டுல்கர் 15921
- ரிக்கி பாய்ண்டிங் 13378
- ஜேக் காலிஸ் 13289
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News