
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் 4 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்றில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட்மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடும். மறுபக்கம் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய மகளிர் பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி
இங்கிலாந்து மகளிர் பிளேயிங் லெவன்: சோபியா டங்க்லி, டேனியல் வயட்-ஹாட்ஜ், மியா பவுச்சியர், டாமி பியூமண்ட் (கேப்டன்), ஆமி ஜோன்ஸ், பைஜ் ஸ்கோல்ஃபீல்ட், சோஃபி எக்லெஸ்டோன், எம் ஆர்லாட், சார்லோட் டீன், இஸ்ஸி வோங், லின்சி ஸ்மித்