ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கரோனா பாதிப்பு!

Former IPL Chairman Lalit Modi On 24x7 External Oxygen After Contracting Covid
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியவரும் அதன் முன்னாள் தலைவருமான லலித் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர் சில மாதங்களுக்கு முன்னதாக, நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு அவை இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 24*7 தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், 'இரண்டு மருத்துவர்கள் கடந்த 3 வாரங்களாக என்னை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது 24 நேரமும் செயற்கை ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் கடந்த 3 வாரங்களாக என்னுடன் இருக்கின்றனர். அனைவருக்கும் நன்றி' எனப் பதிவிட்டுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News