WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை நடைபெறும் 3ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல்…
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை நடைபெறும் 3ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதேசமயம் குஜராத் அணியும் தங்களது வெற்றியுடன் தொடரை தொடங்க ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.