Advertisement

WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan February 24, 2024 • 22:39 PM
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை நடைபெறும் 3ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதேசமயம் குஜராத் அணியும் தங்களது வெற்றியுடன் தொடரை தொடங்க ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் -  இரவு 7.30 மணி 

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • மும்பை இந்தியன்ஸ் - 02
  • குஜராத் ஜெயண்ட்ஸ் - 0

பிட்ச் ரிப்போர்ட்

இத்தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானத்தில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க முடியும். மேலும் சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரும் இந்த மைதானத்தில் நடைபெற்றது. இது அதிக ரன்கள் கொண்ட தொடராக அமைந்தது. எனவே இங்கு சில பெரிய ஸ்கோரிங் போட்டிகளை ரசிகர்கள் காணமுடியும் என்பதை உறுதியாக நம்பலாம்.

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்:  ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), யாஸ்திகா பாட்டியா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், எஸ் சஜனா, பூஜா வஸ்த்ரகர், ஷப்னிம் இஸ்மாயில், கீர்த்தனா பாலகிருஷ்ணன், சைகா இஷாக்.

குஜராத் ஜெயண்ட்ஸ்: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி (கே), லாரா வொல்வார்ட், தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னர், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்நே ராணா, மன்னத் காஷ்யப், தனுஜா கன்வர், மேக்னா சிங்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: யாஷ்திகா பாட்டியா, பெத் மூனி
  • பேட்டர்ஸ்: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், லாரா வோல்வார்ட், ஹர்மன்பிரீத் கவுர்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட் (துணை கேப்டன்), அமேலியா கெர், ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்), சினே ராணா
  • பந்து வீச்சாளர்கள்: ஷப்னிம் இஸ்மாயில்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement