டி காக், கிளாசென் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர் - ஐடன் மார்க்ரம்!

டி காக், கிளாசென் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர் - ஐடன் மார்க்ரம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் டி காக் 174 ரன்கள் குவித்தார். இதையடுத்து விளையாடிய வங்கதேசம் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணி தரப்பில் மஹ்மத்துல்லா 111 ரன்கள் அடித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News