
ஐசிசி நடத்தும் 13ஆவது உலக கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்தியா, அஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் இன்று நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸமான், ஆகா சல்மான், உஸாமா மிர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் வங்கதேச அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து 4 தோல்விகளை தழுவியுள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் : லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(கே), முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், ஃபகார் ஸமான், பாபர் ஆசம்(கே), முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல், இஃப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷாஹீன் அஃப்ரிடி, உசாமா மிர், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவூஃப்.