ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தர்மசாலாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி ஆகியோர் இடம்பிடித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியையே சந்திக்காத இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தங்களது வெற்றி கணக்கு தொடரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லேதம் (கே), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்