ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கை : பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(லே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, தில்ஷான் மதுஷங்க
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், காலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வ், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்