மிடில் ஓவர்களில் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை - பாபர் ஆசாம்!
ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 367/9 ரன்கள் எடுத்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163, மிட்சேல் மார்ஷ் 121 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான்…
ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 367/9 ரன்கள் எடுத்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163, மிட்சேல் மார்ஷ் 121 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்திய ஷாஹின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளும் ஹரிஷ் ரவூஃப் 3 விக்கெட்களும் எடுத்தனர்.