ஐசிசி உலகக்கோப்பை 2023: டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி பந்துவீச்சு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில்…
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேனுக்கு பதிலாக ஜிம்மி நீஷமும், ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் க்ரீனிற்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ்(கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(கே), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லோக்கி ஃபர்குசன், டிரென்ட் போல்ட்.