
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹித் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், நூர் அகமது
பாகிஸ்தான்: அப்துல்லா ஷஃபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், உசாமா மிர், ஷஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவூஃப்.