டி20 உலகக்கோப்பை 2024: இலச்சினையை வெளியிட்டது ஐசிசி!

டி20 உலகக்கோப்பை 2024: இலச்சினையை வெளியிட்டது ஐசிசி!
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் 4 முதல் 30 வரை ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரும், வங்கதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான இலச்சினையை ஐசிசி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும், டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News