ஐஎல்டி20 2024: டாஸ் வென்றுள்ள டெஸர்ட் வைப்பர்ஸ் அணி பந்துவீச்சு!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ்…

மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்: முகமது வசீம், ஆண்ட்ரே ஃபிளெட்சர், நிக்கோலஸ் பூரன்(கே), அம்பத்தி ராயுடு, டிம் டேவிட், டுவைன் பிராவோ, அகீல் ஹொசைன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, முஹம்மது ரோஹித் கான், வக்கார் சலாம்கெயில், டிரெண்ட் போல்ட்
டெஸ்ர்ட் வைப்பர்ஸ்: ரோஹன் முஸ்தபா, காலின் முன்ரோ(கே), ஆடம் ஹோஸ், ஆசம் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அலி நசீர், வனிந்து ஹசரங்கா, ஷஹீன் அஃப்ரிடி, முகமது அமீர், மதீஷா பத்திரனா, லூக் வூட்.