இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி நடப்பு சீசனில் வெற்றியை ஈட்டமுடியாமல் புள்ளிப்பட்டியளில் கடைசி இடத்தில் உள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்ஃப் ஜெயண்ட்ஸ்: ஜேமி ஸ்மித், ஜேம்ஸ் வின்ஸ்(கே), ஜோர்டான் காக்ஸ், கிறிஸ் லின், உஸ்மான் கான், ஷிம்ரான் ஹெட்மையர், ஆயன் அப்சல் கான், கிறிஸ் ஜோர்டான், டொமினிக் டிரேக்ஸ், முஜீப் உர் ரஹ்மான், பிளஸ்ஸிங் முசரபானி.
டெஸர்ட் வைப்பர்ஸ் : கொலின் முன்ரோ(கே), அலெக்ஸ் ஹேல்ஸ், ரோஹன் முஸ்தபா, ஆடம் ஹோஸ், ஆசம் கான், ஷதாப் கான், வனிந்து ஹசரங்கா, ஷாஹீன் அஃப்ரிடி, ஆர்யன் லக்ரா, முகமது அமீர், தைமல் மில்ஸ்.