இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், ஆடம் ஸாம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்(கே), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா
ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட்(கே), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, தன்வீர் சங்கா