உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. அதன்படி, கடந்த நவம்பர் 24ஆம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
அதேபோல், நவம்பர் 26 நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் டிராவிஸ் ஹெட், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரண்ட்ராஃப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட்(கே), நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்(கே), ரிங்கு சிங், திலக் வர்மா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா.