இந்தியவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உள்ளது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேற இப்போட்டி முக்கியம் வாய்ந்தது என்பதால் இந்திய அணி தீவிரமாக செயல்பட தயாராகி வருகிறது. அதேவேளையில், கடைசிப் போட்டியையும் கைப்பற்றி தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டு வருகிறது. இதனிடையே, இப்போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்தவித மாற்றமங்களும் செய்யப்படவில்லை. அதேசமயம் முகமது சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டு, முகமது ஷமி மீண்டும் அணிக்குள் இடம்பிடித்துள்ளார்.
இந்தியா: ரோஹித் சர்மா(கே), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித்(கே), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், டாட் மர்ஃபி, மேத்யூ குன்னமேன்.