இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டியில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி இத்தொடரை இழந்துள்ளதால் ஆறுதல் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா: ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட்(கே), பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லீஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா.
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்(கே), ஜிதேஷ் சர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.