இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று (ஜனவரி 22) முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முகமது ஷமி இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர்(கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட்
இந்தியா பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஹார்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.